Orientation Day 2023
Browse highlights from Orientation Day 2023, where new students and parents learnt about Umar Pulavar Tamil Language Centre's programmes and facilities.
Orientation Day 2023


உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இணையும் புதிய மாணவர்களுக்காக ஆண்டுதோறும் நடைபெறும் அறிமுகத் தினம் இன்று சிறப்பாக நடந்தேறியது. உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் தரமான தமிழ்க்கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதைக் குறிக்கோளாகக்கொண்டு இயங்கிவருகிறது. அந்தவகையில், நிலையத்தின் கற்றல் கற்பித்தல் தொடர்பான தகவல்கள், மரபு பண்பாடு தொடர்பான நடவடிக்கைகள், சமூகப் பங்காளித்துவ முயற்சிகள் குறித்த முன்னெடுப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் நிலைய மாணவர்களின் பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டன. தேசிய வளமையகமாக இயங்கும் நமது நிலையத்தின் வசதிகளையும், வளங்களையும் பெற்றோர்கள் நேரடியாகக்கண்டு அறிந்துகொண்டனர். சிறப்பாக நடந்தேறிய நிகழ்விலிருந்து ஒரு சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு... .



